×

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.72.74 லட்சம்

சத்தியமங்கலம், ஏப்.25:  சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய தலமாகும். இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.  நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சபர்மதி, பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் 20 உண்டியல் திறக்கப்பட்டது. ராஜன்நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாளர்களும், சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் பள்ளியை  சேர்ந்த மாணவ மாணவியர் பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், மொத்த உண்டியல் வசூல் ரூ.72 லட்சத்து 74 ஆயிரத்து 996 ரூபாயும், 547 கிராம் தங்கமும், 1504  கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Bannari Amman temple ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்...