1.450 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் இருவர் கைது

வீரவநல்லூர், ஏப். 25:  வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன் நேற்றிரவு 8 மணியளவில் வெள்ளாங்குளியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை மடக்கி பிடித்தார். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது 1 கிலோ 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பிடிபட்டவர்கள் அரிகேசவநல்லூரை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் தர்மேந்திரன் (30), வெள்ளாங்குளி பசும்பொன் நகர் முத்துராமலிங்கம் மகன் மதியழகன் (23) என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : Kanja ,
× RELATED பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் திரிந்த 3 பேர் சிக்கினர்