மூலைக்கரைப்பட்டி அருகே வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்

நாங்குநேரி, ஏப். 25: மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி (60), மாடசாமி (50). விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் படப்பை, அப்பகுதியில் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வள்ளியூர் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைக்க முயன்றனர். இதில் கந்தசாமிக்கு சொந்தமான 530 வைக்கோல் கட்டு மற்றும் மாடசாமிக்கு சொந்தமான 400 வைக்கோல் கட்டுகள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : straw bursts ,corner ,
× RELATED 10 வயது கேரள சிறுவனின் ‘ஜீரோ டிகிரி’...