×

கோளரங்கில் கோடைகால பயிற்சி 225 மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருச்சி, ஏப்.25:  திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான 3 நாள் கோடை கால பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.  திட்ட இயக்குநர் அகிலன் வரவேற்றார். திருச்சி ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ரூபன் ராஜ் தலைமை வகித்தார். முகாமின் தொடக்க நாளான நேற்று அடிப்படை வானவியல் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கோவை ஜெம் டிரஸ்ட் ரமேஷ் ஆறுமுகம் பேசினார். ‘முடிவெடு செயல்படு’ என்ற தலைப்பில் ஆங்கில மொழி பயிற்சியாளர் சூரியகுமார் பேசினார். திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் நடைபெதிருவெறும்பூர், ஏப்.25:  திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்படாத இந்த கோடை காலத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிர் செய்யும் காலத்தில் அதிக மகசூல் பெறாம் என வேளாண் அதிகாரி தெரவித்துள்ளார்.

இது குறித்து திருவெறும்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்தர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை காலத்தில் வயலில் பயிர் இல்லாத சமயமே மண் பரிசோதனை செய்ய ஏற்றது. மண் பரிசோதனை செய்து அதிக மகசூல் பெற முடியும். நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு நல்ல தரமான விதை, உர நிர்வாகம், பூச்சி நோய் நிர்வாகம், பாசன நீர் நிர்வாகம், களை நிர்வாகம் என பல தொழில்நுட்பங்களை கையாண்டாலும் அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையான மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உரம் இடாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் மகசூலை எடுக்க இயலாது. மண்ணில் உள்ள சத்துகளை அறிய, மண்ணில் உள்ள குறைப்பாடுகளை அறிய மற்றும் அடுத்த பயிருக்கு தேவையான உர சிபாரிசை அறிந்துக்கொள்ள மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனைக்கு  மண் எடுக்கம்போது, மர நிழல் உள்ள இடங்கள், வயலில் குப்பை கொட்டிய இடம், வரப்புகளின் ஓரம் போன்ற இடங்களை தவிர்த்து, ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 இடங்களிலிருந்து பரிசோதனைக்கு மண் எடுக்க வேண்டும். வயல் அறுவடைக்கு பின் வயல் தரிசாக உள்ளபோது மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

 அவ்வாறு சேகரித்த மண்ணை கால் பங்கீட்டு முறையில் குறைத்து, சுமார் அரை கிலோ மண்ணை ஒரு சுத்தமான துணிப்பையில் வைத்து, பெயர், முகவரி, முன்னர் சாகுபடி செய்த பயிர், அடுத்து சாகுபடி செய்ய போகும் பயிர், பாசனம் போன்ற விபரங்களை எழுதி மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி மண் பரிசோனை செய்ய வேண்டும். பேரூட்ட சத்துகளுக்கு ரூ.10 நுண்ணூட்ட சத்துகளை அறிந்துகொள்ள ரூ.10ம் விவசாயிகளிடமிருந்து  கட்டணமாக வசூலிக்கப்படும். மண் பரிசோனை முடிவுகளின் அடிப்படையில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தேவையான உரம் இடுவதால் விவசாயிகளுக்கு உர செலவை குறைப்பதுடன் அதிக மகசூலும் பெறலாம். எனவே திருவெறும்பூர் விவசாயிகள் இந்த கோடை காலத்தில் மண் பரிசோதனை செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Courtyard Course ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா