×

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி கோவிலூர் அரசு பெண்கள் பள்ளிக்கு பாராட்டு

முத்துப்பேட்டை, ஏப். 25: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 233 மாணவிகள் இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் சமீபத்தில்  வெளியான தேர்வு முடிவில் 233 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இந்த பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான மாணவிகள் 458 மார்க்குக்கு மேல் எடுத்துள்ளனர். தேர்ச்சிபெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை தாமரைச்செல்வி பாராட்டினார். இந்தநிலையில் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி தரம் மற்றும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியை தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியைகளை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் நிர்வாகிகள், கலாம் கனவு இயக்கம் சார்பில் பொருளாளர் கிஷோர் தலைமையில் நிர்வாகிகள், ஜீனியர் ரெட்கிராஸ் சார்பில் வட்டார தலைவர் ஆசிரியர் செல்வசிதம்பரம் மற்றும் நிர்வாகிகள், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைச்செயலாளர் மருது ராஜேந்திரன், கோவிலூர் கோயில் முன்னாள் அறங்காவலர் ராஜேந்திரன் உட்பட பல்வேறு அமைப்பினர் சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பாராட்டினர்.

Tags : examination ,Plus 2 ,Kovilur Government Girls' School ,
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...