×

பிறவி மருந்தீசர் கோயில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி, ஏப்.25: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயில் சித்திரை தேர்திருவிழாவினை முன்னிட்டு நேற்று தெப்போற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) சித்திரைத் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் பிறவி மருந்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைநடைபெற்றது. சாமிவீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  கடந்த 16ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு உபயதாரர் மலர் வணிகஉரிமையாளர்கள்மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மருந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு  அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் மற்றும் பெரியநாயகிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் தெப்பத்திற்கு செல்லும் முன்பு கல்யாணசுந்தர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைநடைபெற்றது.  பின்னர் கோயில் எதிர்புறமுள்ள திருக்குளத்தில் தெப்பஉற்சவம் நடைபெற்றது. தெப்பஉற்சவ ஏற்பாடுகளை மலர் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : Devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி