×

சுத்தமல்லி புதுத்தெருவில் குடிநீர் குழாய்கள் அமைத்ததால் 8 மாத பிரச்னைக்கு தீர்வு

தா.பழூர், ஏப். 25: தினகரன் செய்தி எதிரொலியாய் சுத்தமல்லி புதுத்தெருவில் பொதுமக்களின் 8 மாத குடிநீர் பிரச்னையை அதிகாரிகள் தீர்த்து வைத்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமம் புதுத்தெருவில் குடிநீர் ெதாட்டி உள்ளது. இந்த தொட்டியில் மோட்டார் பழுதானதால் கடந்த 8 மாதமாக இயங்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள், தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது தெரு குழாய்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. புதுத்தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிநீர் தொட்டியை நம்பியே உள்ளது.

தற்போது தெரு குழாய்களில் தண்ணீர் திறந்து விட்டாலும் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் தண்ணீர் வருவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் தண்ணீரை தேடி விளைநிலங்களில் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய மோட்டார் பம்புகள் தேடி செல்லக்கூடிய அவல நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமான நிலையில் குளம், குட்டை, வாய்க்கால் என அனைத்திலும் தண்ணீர் இல்லாத நிலையில் கால்நடைகளும் தவித்து வருகிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் குடிநீர் தொட்டி மோட்டாரை சரி செய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது புது தெருவில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் மோட்டார் நீர்மட்டம் குறைந்தது தெரியவந்தது. இதையடுத்து சுத்தமல்லி வடக்கு தெருவில் அமைந்துள்ள 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தனியாக குழாய் அமைத்து புதுத்தெருவில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் தெருக்களில் 8 பொது குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் செய்தி வெயியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : formation ,drinking water pumps ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் 100...