×

வேப்பூர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் விண்ணப்பங்கள் வாங்க மாணவிகள் குவிந்தனர் முதல் நாளில் 500 விண்ணப்பங்கள் விநியோகம்

பெரம்பலூர், ஏப்.25:  வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் மாதிரிக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது. முதல்நாளே 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை வாங்க குவிந்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிர் மாதிரிக் கல்லூரியில் நடப்பு 2019-2020 கல்வியாண்டின் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று தொடங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் மீனா விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது :

இக்கல்லூரியில் இளங்கலை பட்ட வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், பி.காம், பிபிஏ மற்றும் இளம் அறிவியல் பட்ட வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய 9 பட்ட வகுப்புகளுக்கும், முதுகலை பட்ட வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், எம்காம் மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகளில் கணிதம் ஆகிய 4பட்ட வகுப்புகளுக்கும் 2019-2020ம் கல்வியாண்டு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் ஏப்ரல் 24ம்தேதி தொடங்கி மே மாதம் 10ம்தேதிவரை வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மே மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும்.

இதில் இளங்கலைப் பட்ட வகுப்புகளில் ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு தலா 120 பேர்களும், இதர பட்ட வகுப்புகளில் அறிவியல் பட்ட வகுப்புகளுக்கு தலா 60 பேர்கள், கலை பட்ட வகுப்புகளுக்கு தலா 70 பேர்கள் மற்றும் முதுகலைப் பட்ட வகுப்புகள் என மொத்தம் 670 மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப் படவுள்ளது. விண்ணப்பம் ஒன்றின் விலை ரூ.120 ஆகும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்களது சாதி சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுச் செல்லலாம். கவுன்சிலிங் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இக்கல்லூரியில் பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட ங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதல்நாளிலேயே விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

Tags : student ,arrival ,Vepur Bharathidasan Elementary College ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...