கார் மோதி விவசாயி பலி

பெரம்பலூர், ஏப்.25: பெரம்பலூர் அருகே கார்மோதிய விபத்தில் விவசாயி பலியானார். பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(70) விவசாயி. இவர் நேற்று சிறுவாச்சூர் அருகே சாலையை கடக்க நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது அவர்மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் செல்லமுத்து பலத்த காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லமுத்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சென்னை, மதனவாக்கம், லலிதா நகரை சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ்(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car crash ,
× RELATED விவசாயி தற்கொலை