×

காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 26ம் தேதி தொடக்கம்

காரைக்கால்,ஏப்.25:   காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆண்டுத்திருவிழா வரும் 26ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. விழா முடியும் வரை, தினமும் மாலை சிறிய தேர்பவனியும், திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மே 3ம் தேதி இரவு மூன்று பெரிய தேர்பவனியும், மே 4ம் தேதி இரவு காரைக்கால் மாவட்ட பங்குத்தந்தை அந்தோனிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டு 5 தேர்களின் அணிவகுப்பும் நடைபெறும். 5ம் தேதி காலை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை, தருமபுரம் மற்றும் தக்களூர் கிராம பஞ்சாயத்தார்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : Sebastian Festival ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...