×

தலைஞாயிறில் ரத்ததான முகாம்

வேதாரண்யம், ஏப்.25: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  ரத்ததான முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  முகாமில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, பட்டாபிராமன், செந்தில்குமார், நாகராஜன், அருனானந்தம் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Thalassery ,
× RELATED உத்தமபாளையம் வட்டாரத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்