×

வேதாரண்யம், ராமேஸ்வரம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க வேண்டும்

இந்து மக்கள் கட்சி கோரிக்கை
சீர்காழி, ஏப்.25: வேதாரண்யம், ராமேஸ்வரம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சி  மாநிலச் செயலாளர்  சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 200க்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்தவர்கள் பலியாகி உள்ள இந்த சம்பவத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகளை குறிவைத்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழலாம் என ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை இலங்கையை எச்சரித்து தகவல் கொடுத்து இருந்தபோதிலும் இலங்கை காவல்துறை மெத்தனமாக நடந்து
கொண்டிருக்கிறது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் மிக வலிமையாக காலூன்றியுள்ளது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. கொழும்பு மற்றும் இந்து தமிழர்களின் பூர்வீக பூமியான யாழ்ப்பாணம் மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழீழ பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்புகள் மிகவும் வலிமையாக காலூன்றியுள்ளன. கிழக்கு மாகாணத்தில் இந்து தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக கடந்த தேர்தல்களில்  ராஜபக்சேயின் அரசியல் கட்சியோடும், அரசாங்கத்தோடும் கூட்டணி அமைத்து செயல்பட்ட இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றி இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் வெகுவேகமாக தமிழர்களின் வாழ்விடங்களில் கலாச்சார பண்பாட்டு தளங்கள் முழுமையாக முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

இந்து தமிழர்களின் மக்கள்தொகை இலங்கையில் குறைந்து வருகிறது. தற்போது இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கிறிஸ்தவர்களை குறிவைத்து கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான புனிதவெள்ளி தினத்தன்று இந்த பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்கள். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன. பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள்.முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கும் கிறிஸ்தவ நாடுகளுக்குமிடையே உலகம் முழுவதும் மிகப்பெரிய மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத இந்தியாவிலும் இலங்கையிலும் திட்டமிட்டு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவியுள்ளன.

இலங்கையிலே ஊடுருவியுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நமது நாட்டின் தெற்கு எல்லை வழியாக குறிப்பாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மூலமாக இலங்கையில் இருந்து வெகு சுலபமாக தமிழகத்தின் உள்ளே ஊடுருவ முடியும். இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய முஸ்லிம் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கள் தமிழகத்திலும் உள்ளன. இவர்களின் அடுத்த குறி தமிழகம் மற்றும் கேரள மாநிலம் ஆகத்தான் இருக்கும். இது விஷயத்தில் தமிழக அரசாங்கமும் கேரளா அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் கவனம் கொடுத்து இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களையும் இந்துக்களையும் பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தெற்கில் இந்து மகாசமுத்திரத்தின் மன்னார் வளைகுடாவில் பாதுகாப்புகளை பலப்படுத்த வேண்டும். தற்பொழுது இலங்கை அரசாங்கத்தின் சீன பாகிஸ்தான் ஆதரவு போக்கினால் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இலங்கையிலே காலூன்றி வருகின்றன. எனவே இந்திய அரசாங்கம் இது விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Vedaranyam ,Rameswaram ,terrorists ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...