×

அடிப்படை வசதியின்றி செயல்படும் மண்மங்கலம் ஆர்டிஓ அலுவலகம் வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல் மக்கள் தவிப்பு

கரூர், ஏப்.25: அடிப்படைவசதியில்லாததால் மண்மங்கலம் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர். கரூர் திண்டுக்கல் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே வட்டாரபோக்குவரத்து அலுவலகம் உள்ளது. கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. புதியதாக துவக்கப்பட்ட இந்த அலுவலகத்தில் அடிப்படை வசதிகள்எதுவும் இல்லை. மேலும் வாகன புதுப்பித்தல், டிரைவிங் லைசென்சுக்காக வருவோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடம்இல்லை. அலுவலகம் அருகில் உள்ள மரத்தடியில்நின்று அழைக்கும் நேரத்தில் வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சேவைக்காக வரும் மக்களுக்கு  ஒதுங்கி நிற்பதற்கு பந்தல் அமைப்பது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,RTO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...