×

கரூர் காமராஜபுரம் பகுதியில் கம்பி மேன்ஹோலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 25: கரூர் காமராஜபுரம் மேற்கு ராம்நகரில் பாதாள சாக்கடை திட்ட மேற்புர மூடி இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரின் மையப்பகுதியில் மேற்கு காமராஜபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும், ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள இந்த பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஒரு சில பகுதியை தவிர பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ராம்நகரில், பாதாள சாக்கடை திட்ட மேற்புர மூடி (கம்பியிலான) எந்த நேரத்திலும் இடிந்து உள்ளே விழும் நிலையில் உள்ளது. தொடர் வாகன போக்குவரத்து காரணமாக இந்த மூடி மோசமான நிலையில் உள்ளது. வாகனங்கள் அதிகளவு சென்று வரும் நிலையில், இந்த மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Kamarajapuram ,area ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...