ராயனூர் கடைவீதி பகுதியில் தண்ணீர் கசிவால் சுகாதாரகேடு

கரூர், ஏப். 25: கரூர் ராயனூர் கடைவீதி பகுதியில் தண்ணீர் கசிவு காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது குறித்து கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் தாந்தோணிமலைக்கு அடுத்ததாக முக்கிய பகுதியாக உள்ளது ராயனூர். பிரதான திண்டுக்கல் சாலையோரம் ராயனூர் பகுதி உள்ளது. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ராயனூர் கடைவீதியில் உள்ளது. இதில், ராயனூர் நான்கு ரோடு அருகே உள்ள கேட்வால்வில் இருந்து வெளியேறும் தண்ணீர், கடைவீதியை ஒட்டி சாலையோரத்தில் பரவி உள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மேலும், பிரியாணி கடை, சிக்கன் கடை போன்ற கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் தண்ணீரும் சேர்ந்து சாலையோரம் செல்வதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சுகாதாரம் மேம்பட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>