கெங்கவல்லியில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

கெங்கவல்லி, ஏப்.25: கெங்கவல்லி பஸ் ஸ்டாப்பில் பட்டுப்போன பழமையான புளியமரத்தை அகற்ற ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ெகங்கவல்லி பஸ் ஸ்டாப்பில் மிகவும் பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி முழுவதும் பட்டுப்போன நிலையில் உள்ளது. புளியமரத்தை சுற்றிலும் டீ கடை, மெடிக்கல் உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2நாட்களுக்கு முன் வீசிய பலத்த காற்றினால், புளியமரம் லேசாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டுப்போன இந்த மரத்தை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,
× RELATED மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி