×

மேலுமலையில் இளம்பெண் கொலை கர்நாடகாவில் முகாமிட்டு 3 தனிப்படை விசாரணை

சூளகிரி,  ஏப்.25: சூளகிரி அடுத்த மேலுமலையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். சூளகிரி அடுத்த மேலுமலையில், பிஜிதுர்க்கம் செல்லும் வழியில் உள்ள  வனப்பகுதியில், கடந்த வாரம் பாறையிடுக்கில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலின் பேரில், சடலத்தை கைப்பற்றி சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது  பற்றி எவ்வித துப்பும் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. அவரது ைகயில் கன்னடத்தில் பச்சை குத்தி இருந்ததால், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என உறுதியாகி உள்ளது. இதையடுத்து, சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், எஸ்ஐ  யுவராஜ் தலைமையில் 3 தனிப்படையினர் கர்நாடகாவில் முகாமிட்டு, இறந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு,  அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் மாயமான பெண்கள் குறித்த புகார்களை பெற்று, தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.

Tags : investigations ,Karnataka ,
× RELATED கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில்...