×

வயது மூப்பால் மரணம் அடைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி உடல் நள்ளிரவில் அடக்கம்: அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி நேற்று முன்தினம் இரவு வயது மூப்பு காரணமாக இறந்தார். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக, இவருடைய உடல் இரவோடு இரவாக பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி (91). காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கும்படி கடந்த 30 ஆண்டுகளாக போராடியவர். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீநகரின் ஹைதர்போராவில் உள்ள அவரது வீட்டில் இவர் இறந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெரியளவில் கூட்டம் கூடும் என்றும், இதை பயன்படுத்தி தாக்குதல் போன்ற சதித் திட்டங்களில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் எனவும் உளவுத்துறைகள் எச்சரித்தன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவமும், போலீசாரும் குவிக்கப்பட்டனர். சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் திரள்வதை பாதுகாப்பு படைகள் தடுத்தன.மேலும், உளவுத்துறையின் எச்சரிக்கையை கிலானியின் குடும்பத்தினரிடம் எடுத்து கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், உடலை இரவில் அடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு கிலானியின் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர். அதே நேரம், கிலானியின் விருப்பப்படி வீட்டின் அருகில் இருக்கும் மசூதி வளாகத்தில்தான் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவருடைய நெருங்கிய உதவியாளர்கள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் இறுதிச்சடங்கை நடத்த விரும்புவதாக கிலானியின் மகன் நயீம் தெரிவித்தார். இறுதியில், கிலானியின் விருப்பப்படி வீட்டின் அருகில் உள்ள மசூதி வளாகத்திலேயே நள்ளிரவில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதை முன்னிட்டு, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டன.* செல்போன் சேவை துண்டிப்புகிலானி மறைவு குறித்து பொய் செய்திகள், வன்முறைகளை தூண்டும் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க, செல்போன் சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள், இன்டர்நெட் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலும் தடுப்புக்கள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. * பாகிஸ்தானில் துயரம் அரை கம்பத்தில் கொடிகிலானியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தானில் நேற்று ஒரு நாள் அரசு முறை துக்கமும் அனுசரிக்கப்பட்டது. அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது….

The post வயது மூப்பால் மரணம் அடைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி உடல் நள்ளிரவில் அடக்கம்: அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Geelani ,Sri Nagar ,Syed Ali Shah Gilani ,Jammu ,Kashmir ,
× RELATED காஷ்மீரில் நீடிக்கும் கடும் பனிப்பொழிவு விமான சேவைகள் ரத்து