×

பார்வையற்ற பெற்றோர், தம்பிகளை காப்பாற்றும் 8 வயது சிறுவன் குருவி தலையில் பனங்காய்: ஆட்டோவை ஒட்டிச் சென்று அரிசி, பருப்பு விற்பனை

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம் கங்குடுபல்லே கிராமத்தை சேர்ந்தவர் பாப்பிரெட்டி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனான 8 வயது கோபால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பார்வை இழந்த தனது பெற்றோர்கள், 2 சகோதரர்களை காப்பாற்றுவதற்காக ஆட்டோ உயரம் கூட இல்லாவிட்டாலும் பேட்டரி ஆட்டோவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்து வருகிறான். நேற்று திருப்பதி செர்லோபள்ளி அருகே கோபால் தனது தந்தை பாப்பி ரெட்டி மற்றும் இரண்டு சகோதரர்களுடன் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தான். இதனை ஆச்சரியத்துடன் பார்த்த சக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்டோவை நிறுத்தி கேட்டபோது எனக்கும் எனது மனைவிக்கும் கண் பார்வை இல்லாததால் தனது மூத்த மகனே ஆட்டோவில் அரிசி பருப்புகளை விற்று தங்களை பசியைப் போக்கி வருவதாக பாப்பி ரெட்டி தெரிவித்தார். ஆனால், ஆட்டோவின் உயரம் கூட இல்லாத 8 வயது சிறுவன் ஆபத்தான வகையில் ஆட்டோவை ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என பொதுமக்கள் கேட்டதற்கு அவ்வாறு எதுவும் நடக்காது. எனது மகன் மிகவும் சாமர்த்தியமானவன் என பாப்பிரெட்டி தெரிவித்தார். இதனையடுத்து, கோபால் ஆட்டோவை ஓட்டி சென்றான். எட்டு வயது கூட நிரம்பாத சிறுவன் பார்வையற்ற பெற்றோரையும், சகோதரர்களையும் காப்பாற்றக் கூடிய பொறுப்பு உள்ள நிலையில் தன்னார்வ அமைப்பினர் இவர்களின் வறுமையை போக்க  ஒரே இடத்தில் இருந்தபடி அவர்கள் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பார்வையற்ற பெற்றோர், தம்பிகளை காப்பாற்றும் 8 வயது சிறுவன் குருவி தலையில் பனங்காய்: ஆட்டோவை ஒட்டிச் சென்று அரிசி, பருப்பு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Gangutupalle village ,Chandragiri mandal, Chittoor district, Andhra state ,Revathi ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...