×

தாதம்பட்டி-சிட்டம்பட்டி இடையில் ரிங் ரோடு அமைக்கும் விவகாரத்தில் தற்ேபாதைய நிலை நீடிக்க உத்தரவு

மதுரை, ஏப். 25: தாதம்பட்டி-சிட்டம்பட்டி இடையே ரிங்ரோடு அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த அம்பிகாபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி  தாதம் பட்டியிலிருந்து சிட்டம்பட்டி வரை ரிங்ரோடு அமைப்பது குறித்து கடந்தாண்டு ஏப்ரலில் மத்திய சாலை போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்துவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதற்கு மத்திய சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு குழுவின் அறிக்கை பெறவில்லை. வனத்துறையின் தடையில்லாச் சான்றும் பெறவில்லை. பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. சாலைக்காக தற்போது எல்லைக் கற்கள் நடும்பணி நடந்து வருகிறது. எனவே, ரிங் ரோடு அமைக்கும் அறிவிப்பிற்கு தடை விதித்து, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் ரிங்ரோடு அமைக்கும் விவகாரத்தில் தற்ேபாதைய நிலை நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மதுரை கலெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Ring Road ,Chittampatti ,Dadampatti ,
× RELATED ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் 2 வாலிபர்கள் கைது