×

காவிரி தொழில்நுட்பக்குழு கடிதத்தில் தகவல் ேகாதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் மாற்றம் கல்லணைக்கு பதில் கட்டளையில் நீர் வழங்க முடிவு

திருச்சி, ஏப்.24:  காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம் (தமிழ்நாடு) தலைவர் மகாதானபுரம் ராஜாராம், பொதுச்செயலாளர் காந்திப்பித்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோதாவரி-காவிரி இணைப்பு பற்றி தொடர் ந்து பேசி வருகிறோம். நடக்குமா? நடக்காதா என்ற விவாதம் தொடர்கிறது. ‘பாஜக ஆட்சிக்கு வந்த பின் கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைத்துள்ளோம்’ என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகள் பயனடையும். இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம் 2004லிருந்து திட்டத்திலே ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தால்தான் சரியான பலன் கிடைக்கும் என்று தொழில்நுட்ப அறிக்கை ஒன்றை பொறியாளர் நடராஜன் கருத்துடன் அரசுக்கு அனுப்பியது. கோதாவரி-காவிரி இணைப்பு முன்பு ஏற்கப்பட்ட திட்டமான கோதாவரி (அக்கினப் பள்ளி) கிருஷ்ணா (நாகார்ஜூன் சாகர்), பென்னார் (சோமசீலா), காவிரி (கல்லணை).

இத்திட்டம் சரிபட்டு வராது என்று பென்னார் காவிரி (கட்டளை)யில் இணைத்தால் தான் தமிழத்தில் 13 மாவட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆண்டுளாக அரசுடன் நாங்கள் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறோம். அதை ஏற்றுக்கொண்டு இருப்பதாக காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன் மாநில நதி நீர்ப் பிரிவு நீர் வளத்துறை தலைவர் ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அதில் கோதாவரி-கிருஷ்ணா-பென்னார்-காவிரி இணைப்புக்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்து வரும் விரிவான திட்ட அறிக்கையில் கோதாவரியிலிருந்து பெறப்படும் நீரை காவிரியிலிருந்து வைகை, குண்டாறு கொண்டு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு காவிரிக்கு (கல்லணை) பதிலாக காவிரி (கட்டளை)யில் நீர் வழங்குவதற்கு ஏற்ப விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி வலியுறுத்தி உள்ளது. இது மகிழ்ச்சி விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஆங்காங்கே உள்ள விவசாய சங்கங்கள் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணி துவங்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ஒரு குழு தமிழக அரசையும், தமிழக அரசின் மூலம் மத்திய அரசையும் சந்தித்து திட்டத்தை விரைவில் செயல்வடிவம் கொடுக்க வற்புறுத்த வேண்டும். 13 மாவட்ட விவசாய சங்கங்கள் பொதுக்குழுக் கூட்டி இத்திட்டத்தை வற்புறுத்த வேண்டும். விவசாயிகள் கூட்டம், போராட்டம் கோதாவரி-காவிரி (கட்டளை) இணைப்புக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cauvery Tech Committee ,Kavali ,
× RELATED ஆந்திர மாநிலம் காவாலிக்கு வடகிழக்கே...