×

தளிக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

மணமேல்குடி,ஏப்.24: மணமேல்குடி அடுத்த தளிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களால் சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.தொடந்து 10ம் நாள் திருவிழாவான நேற்று  சுற்று வட்டார கிராம மக்கள் விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற காவடி, பால்குடம் எடுத்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அக்னியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழா நாட்களில் புராண நாடகங்கள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தளிக்கோட்டை  கிராமத்தினர் செய்து வருகின்றனர்.பொன்னமராவதி: கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று பெண்கள் பொங்கல் வைத்து கோழி, ஆட்டுக்கிடை பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.பொன்னமராவதி பெரியார்நகர் பொதுமக்கள் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் விழா சில தினங்களுக்கு முன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் கொன்னையூருக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களை கூடையில் வைத்து தலையில் சுமந்து 4 கி.மீ நடந்த சென்றனர். பின்னர் கோயிலில் அனைவரும் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோழி, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர்.

Tags : festival ,Pattukottai Muthumariyamman Temple Chithirai ,
× RELATED கொரோனா எதிரொலி; தாயமங்கலம் கோயில்...