×

ஜப்பானில் பின்னலாடை கண்காட்சி

திருப்பூர், ஏப். 24:   இந்திய, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்திய பின்னலாடை 5வது கண்காட்சியை ஜப்பானில் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்துகிறது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்க முன்பதிவு செய்ய ஏஇபிசி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்ப்ரேட் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. திருப்பூர் பின்னாடை ஏற்றுமதி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கும், உள்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் விற்பனை செய்தது.

இந்திய பின்னலாடைகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்திய பின்னலாடை கண்காட்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 5வது பின்னலாடை கண்காட்சியை ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்துகிறது. இந்த கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளை ேசார்ந்த பையர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வர்தக விசாரணையின் மூலமக புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த கண்காட்சியில் ஸ்டால் அமைக்க ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மே 31ம் தேதிக்குள் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இறுதி நேரத்தில் முன்பதிவு செய்பவர்கள் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த அறிய வாய்ப்பை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். மேலும், விபரங்களுக்கு ஏஇபிசி அலுவலகத்தை தொடர்ப்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Knitting exhibition ,Japan ,
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!