×

ஊட்டி கேரட் விலை சரிவு ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை

ஊட்டி, ஏப். 24: ஊட்டி கேரட்டின் விலை படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மலை காய்கறிகள் பயிரிட்ட போதிலும், அதிகளவு உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டே பயிரிடப்படுகிறது. எப்போதும் கேரட்டிற்கு கணிசமான விலை கிடைக்கும் என்பதாலும், ஆண்டு முழுக்கு விளையும் காய்கறி மற்றும் கிராக்கியும் உள்ளதால் இதனை ஏராளமான விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்த இரு மாதங்கள் முன்வரை கேரட் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் பட்டிப்படியாக உயர்ந்து கிலோ ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் கேரட் விலை சரிந்தது. ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கிலோ ஒன்று ரூ.40 வரை மட்டுமே விற்பனையானது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், கடந்த வாரம் வரை அதிக விலை கிடைத்த நிலையில், விவசாயிகள் பலரும் கேரட் அறுவடையில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது விலை குறைந்து கொண்டே செல்வதால் விவசாயிகள் கேரட் அறுவடை செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Tags : Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்