×

அகதிகள் முகாமில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் தேக்கம்

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் அருகே, குல்லூர்சந்தையில் உள்ள அகதிகள் முகாமில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் அருகே, குல்லூர்சந்தை அகதிகள் முகாம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கு, 150 குடியிருப்புகளில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இவர்கள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் வழிந்தோட வாறுகால் முழுமையாக இல்லை. இதனால், கழிவுநீர் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. மேலும் குடிப்பதற்கான தண்ணீர், கழிப்பறை வசதி இல்லாத நிலையில், முகாமில் உள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குல்லூர் சந்தை முகாமில் குடும்பங்களுக்கு கூடுதல் குடியிருப்புகளும், குடிநீர் வசதி, கழிவுநீர் வாறுகால், சுகாதார வளாகங்கள் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகாமில் தங்கி இருப்போர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : refugee camps ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...