×

வாட்ஸ்அப்பில் தவறான பதிவு ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதியில் மறியல்

ராமேஸ்வரம், ஏப். 24: ஒரு சமுதாய பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வாட்ஸ்அப்பில் ஆடியோ பரவியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெண்களை இழிவாகி பேசி ஆடியோ பதிவு செய்தவர்களை கைது செய்யவும், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபோல் கமுதி தாலுகா அலுவலகம் முன்பு சடையனேந்தல், காக்குடி, வலைய மணக்குளம் ஆகிய ஊரைச் சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வட்டாட்சியர் கல்யாணகுமாரிடம் புகார் மனுவை வழங்கினர். பரமக்குடியில் கமுதி-பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், பரமக்குடி டி.எஸ்.பி. சங்கர் சம்பவயிடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Watts ,Rameswaram ,Paramakudi ,Strike ,
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...