×

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் 200 பேர் கொண்ட 58 குழுக்கள் சுழற்சி முறையில் சோதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

கரூர், ஏப் 24: அரவக்குறிச்சி தொகுதி  இடைத்தேர்தலை முன்னிட்டு 200 பேர் கொண்ட 58 குழுக்கள்அமைத்து சுழற்சி முறையில் சோதனை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அன்ழகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்றுநடைபெற்றது. பறக்கும் படை, நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு, தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுவினர் கலந்து கொண்டனர்.இதில் கலெக்டர் பேசுகையில்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 22ம்தேதி துவங்கியது.  29ம்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் நாள் 30ம்தேதி,. திரும்பப்பெறும் நாள் மே2ம்தேதி (வியாழன்), வாக்குப்பதிவு நாள் மே 19ம்தேதி (ஞாயிறு) வாக்கு எண்ணிக்கை 23ம்தேதி (வியாழன்) நடைபெறுகிறது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 9பறக்கும்படை குழுக்கள், மூன்று நிலையாக நின்ற ஆய்வு செய்யும் குழுக்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 9பறக்கும்படை குழுக்கள், 9நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள், 4தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுக்கள் என  200பேர் கொண்ட 58 குழுக்கள்அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24மணிநேரமும் பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிறபகுதிகளில் இருந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வருவதற்காக உள்ள 21வழிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வாக்காளர்களையோ, அல்லது தனி நபர்களையோ, வற்புறுத்துதல் கூடாது. மேலும் வாக்கு அளிப்பதற்காக பணமாகவோ அல்லது பொருளோ கொடுப்பது கண்டறியப்பட்டால் இந்திய தண்டனைசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.வாகன சோதனையின் போது பொதுமக்கள் ரூ.50ஆயிரம் வரை எடுதது செல்ல இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.அதற்கு  மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்லவேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைமேற்கொள்ளப்படும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை சிறப்பாக நடத்திட அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களில் இடம்பெற்றுள்ள அனைவரும்பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புஉணர்வுடனும் நேர்மையாக பணியாற்றிட வேண்டும் என்றார். கூட்டத்தில் துணைஆட்சியர் கண்ணன்,உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈஸ்வரன், அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Aravagokchchi ,Groups ,Regional District Election Officer ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...