×

வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் சந்தனக்கூடு விழா

வேதாரண்யம், ஏப்.24:  வேதாரண்யம் தாலுகா  கோடியக்காட்டில் அடங்கியுள்ள மஹான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்ஹாவின் சந்தனகூடு பெருவிழா நடைபெற்றது. கோடியக்காடு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலிலிருந்து சந்தனக்கூடு வானவேடிக்கை மற்றும் கிராமிய வாத்தியங்களுடனும் ஊர்வலமாக புறப்பட்டு அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்ஹாவை அடைந்து பின்னர் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஜமாத் மன்ற தலைவர் செய்யது முகமது தலைமையில்   கோடியக்கரை, கோடியக்காடு கிராமத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : ceremony ,Chandana Koodi ,Kodiyakkottai ,Vedaranyam ,
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா