×

தாராபுரம் அருகே கல்லுக்குழியில் மூழ்கி டாஸ்மாக் ஊழியர் பலி

தாராபுரம்.ஏப்.23: திருப்பூர் மாவட்டம் காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் நாட்ராயன்.இவர் சந்திராபுரம்  டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக  பணியாற்றி வந்தார். நேற்று இவர் மது போதையில் நண்பர்களுடன் சேர்ந்து சந்திராபுரம் பகுதியில் இருந்த 80 அடி ஆழ கல்லுக்குழியில் குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கி பல மணிநேரம் தேடியும் நாட்ராயன் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு  காலையில் தேடுதல் பணியை தொடர இருப்பதாக தெரிவித்தனர்.

குழியை மூட கோரிக்கை :சந்திரபுரம் பகுதியில் பல கல்குவாரிகள் மூடப்படாத நிலையில் உள்ளது. பாறைகளை வெட்டி எடுத்ததால் உருவாகிய கல்லுக்குழிகள் தண்ணீர் நிரம்பி இருப்பதால் இதில் குளிக்க மற்றும் துணி துவைக்க வரும் பலர் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கி உயிரிழந்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இதுபோன்ற கல்குவாரிகளில் மழைநீர் தேங்கி, பல்வேறு வகையான நோய்கள் உருவாகி வருகின்றன.அருகே உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் பார் நடத்துபவர்கள், பக்கத்தில் உள்ள இந்த குட்டையில் மது பாட்டில் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவைகளை  வீசி எறிந்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்தொற்று நோயை உண்டு பண்ணும் கிருமிகள் உருவாகியுள்ளது. இதுபோன்ற கல்குவாரிகள் மீது அரசாங்கம் தனி கவனம் எடுத்து அவற்றை மூடும் பணியில் ஈடுபட வேண்டும் என கூறினர்.

Tags : Taskmaster ,crash ,Dharapuram ,
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை