×

தற்கொலை செய்த கணவரின் வீட்டை கேட்டு இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி குழந்தைகளுடன் பெண் போராட்டம்

கும்பகோணம், ஏப். 23: தற்கொலை செய்து கொண்ட கணவரின் வீட்டை எழுதி கேட்டு அவரது இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி மனைவி, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.கும்பகோணம் மவுனசாமி மடத்துத்தெருவை சேர்ந்தவர் மணிராவ் மகன் ஜெயசங்கர் (40).  சமையலரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயசங்கர், கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து ஜெயசங்கரின் உடலை பார்க்கக்கூடாது என்றும், வீட்டுக்கு வரக்கூடாது என ஜெயசங்கரின் தந்தை மணிராவ் மற்றும் தங்கை தனலட்சுமி ஆகியோர் முத்துலட்சுமி, அவரது பெண் குழந்தைகளை அடித்து விரட்டினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கணவரின் சொந்த வீட்டை எனக்கு எழுதி வைக்க வேண்டுமென அவரது மனைவி கேட்டார்.

பின்னர் ஜெயசங்கரின் இறுதி ஊர்வலம் நேற்று புறப்பட தயாரானது. அப்போது ஆத்திரமடைந்து ஊர்வலம் செல்லும் வாகனத்தை மறித்து தனது குழந்தைகளுடன் முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஒரு மணி நேரம் ஜெயசங்கரின் உடல் வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஜெயசங்கரின் இறுதி ஊர்வலம் நடந்தது.


Tags : children ,funeral procession ,house ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்