×

மோர்பாளையம் வித்யாவிகாஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருச்செங்கோடு, ஏப்.23: மோர்பாளையம் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இப்பள்ளி மாணவி அம்சவேணி, 600க்கு 563 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளனர். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும், கல்வி நிறுவனத் தலைவர் முருகன், செயலர் குணசேகரன், தாளாளர் சிங்காரவேல்,  மேலாண்மை இயக்குனர்கள் ராமலிங்கம், முத்துசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி பழனியப்பன், இயக்குனர்கள்  சீராளன், ஞானசேகரன், பள்ளி முதல்வர் மதலைமேரி ஆகியோர் பாராட்டினர்.

Tags : Morpalayam Vidyawasam Matriculation School ,
× RELATED ராசிபுரத்தில் ஆசிரியர்களுக்கு பிரிவுபசார விழா