×

செந்துறையில் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி

செந்துறை, ஏப்.23: செந்துறையில் கோடை வெப்பம் வாட்டிவதைத்த நிலையில் நேற்று சிறிது நேரம் கோடை மழை பெய்ததால் வெப்பம் தனிந்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் மக்களை வாட்டி வதைத்தது, மேலும் தற்போது சித்திரை மாத கத்திரி வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். வெப்பத்தை தனிக்க இளநீர், தர்பூசணி, நொங்கு, குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் வெப்பத்தை தனித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. இருப்பினும் மழை பெய்யவில்லை. நேற்று மாலை வானம் கருமேகத்துடன் திரண்டு வந்து செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தனிந்தது பொதுமக்கள் கத்திரி வெயிலில் மழை பெய்ததின் காரணமாக மகிழ்ச்சியடைந்தனர்.


Tags :
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்