×

மூக்கனூர் மலையில் காட்டுத்தீ

தர்மபுரி, ஏப்.23: தர்மபுரி அருகே மூக்கனூர் மலையில் பிடித்த காட்டுத்தீ கோடைமழையால் கட்டுக்குள் வந்தது. தர்மபுரி அருகே மூக்கனூர் மலை, முத்தம்பட்டி வனப்பகுதி, கோட்டப்பட்டி வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் காட்டுத்தீ சமீபத்தில் பிடித்தது. இதில் முத்தம்பட்டி மற்றும் கோட்டப்பட்டி வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தினர். ஆனால் மூக்கனூர் மலைப்பகுதியில் மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். மலைச்சரிவு பகுதியில் ஏறி அணைக்க போதிய பாதை வசதி இல்லாததால், தீயை எளிதில் கட்டுப்படுத்த வனத்துறையால் முடியவில்லை. இதனால் தீ பிடித்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழை மூக்கனூர் மலைப்பகுதியிலும் பெய்து வருகிறது. இந்த மழையால் காட்டுத் தீ தற்போது கட்டுக்குள் வந்தது. இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், மூக்கனூர் மலைப்பகுதிகளில் ஏறிச் செல்ல முடியாத நிலையில் இருந்ததால் மழைப்பகுதியில் காட்டுத் எரிந்து கொண்டே இருந்தது. தீய கட்டுபடுத்தமுடியாமல் வனத்துறையினர் சிரமத்திற்கு ஆளாகினோம். தற்போது கோடைமழையால் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags : hill ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!