×

திருவெள்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொதிசோறு வழங்கிய விழா

கொள்ளிடம், ஏப்.23: நாகை மாவட்டம்,கொள்ளிடம் அருகே மேலப்பாளையம் கிராமத்தில் வௌ்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு போதிசோறு வழங்கும் விழா நடைபெற்றது.வெயிலில் வெம்மையாலும், தண்ணீரின் வேட்கையுடனும், பசியாலும் வருந்தி வந்த சுந்தரருக்கும் அவருடன் கூடிய அடியவர்களுக்கும், எதிர்கொண்டு வேதியராய் வேடம் பூண்டு பெரிய சுகமான பந்தல் அமைத்து அதில் அவர்களை களைப்பாற செய்து அவர்களுக்கு மணமுள்ள சுவையான குளிர்ந்த நீரையும், பசிதீர பொதிசோறும் அருந்தினார் என்ற சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில், பொதிசோறு வழங்கும் விழா நடைபெற்றது.தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டு உணவருந்தினர். தொடர்ந்து திருவௌ–்ளடை நாதருக்கும் சுந்தரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : ceremony ,Pudisor ,Sundaramoorthy Swamy ,
× RELATED உத்தராகண்ட்டில் மெஹந்தி விழாவின்போது மணப்பெண் உயிரிழப்பு..!!