×

ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி காய்கறி மாலை அணிந்து விவசாயிகள் ஊர்வலம்

அரூர், ஏப்.23: ஈச்சம்பாடி அணை உபரி நீரை கொண்டு, ஏரிகளில் தண்ணீர் நிரப்பக்கோரி, கழுத்தில் காய்கறி மாலை அணிந்தபடி விவசாயிகள் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தனர். கம்பைநல்லூர் அருகே, சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவர், ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரியாக செல்லும் நீரை கொண்டு, நவலை, சின்னாகவுண்டம்பட்டி, பொம்மப்பட்டி, கோபிநாதம்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட ஏரிகளில் நிரப்ப நடவடிக்ைக எடுக்கக்கோரி, செல்போன் டவரில் ஏறி தொடர்ந்து 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்.

அப்போது, சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் மலர்விழி, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, 22ம் தேதி கோரிக்கை மனுவை கொடுக்கும்படி கூறியதை அடுத்து, ஜெயபால் போராட்டத்தை கைவிட்டு, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இதனிடையே நேற்று, அப்பகுதி விவசாயிகள் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, கழுத்தில் காய்கறி மாலை அணிந்து கொண்டு, ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தும் மனுவை கொடுக்க ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோட்டாட்சியர் புண்ணியகோடியிடம் மனு கொடுத்தனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு