×

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி 5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் 1974ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் 10 வசூலிக்கப்பட்டது. பணியின்போது இறந்தால், ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியாக 10 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர், குடும்ப பாதுகாப்பு நிதி கடந்த 2016ம் ஆண்டு 1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதற்காக ஊதியத்தில் 60 பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதி இதுவரை 3 லட்சமாக இருந்தது இனிமேல் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக மாதாந்திர பிடித்தம் 60ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் அதாவது செப்டம்பர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது….

The post பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி 5 லட்சமாக உயர்வு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு