பிளஸ்2 தேர்வில் ஆர்கேஆர்., கல்வி நிறுவனங்கள் சாதனை

உடுமலை, ஏப். 22: உடுமலை ஆர்கேஆர்., கல்வி நிறுவனங்களில் பிளஸ்2 தேர்வு எழுதிய 317 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சபரி கார்த்திகேயனி 600க்கு 582 மதிப்பெண்களும், மாணவிகள் பிருந்தா 576, கீர்த்தனா 567, நர்மதா 564, ஸ்ரீராகவி 564, அஸ்மிவிமிதா 563 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 570க்கு மேல் 6 மாணவர்களும், 550க்கு மேல் 18 மாணவர்களும், 500க்கு மேல் 60 மாணவர்களும், 450க்கு மேல் 66 மாணவர்களும், 400க்கு மேல் 18 மாணவ்களும் பெற்றுள்ளனர். கணக்குப்பதிவியலில் 9 பேரும், பொருளியலில் 12 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 37 ஆண்டுகளாக, இந்நிறுவனம் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் ஆர்,கே.ராமசாமி செயலர் ஆர்கேஆர் கார்த்திக்குமார், தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Related Stories:

>