×

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக அதிமுக வேட்பாளர் ஆனந்தன் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்

திருப்பூர்,ஏப்.22; திருப்பூரில் தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ் கட்சியின் திருப்பூர் முதலாவது மண்டல பொருளாளர் சக்திவேல் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் நாளான கடந்த 18ம் தேதி  அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 20 பேருடன் வாக்களிப்பதற்காக முருங்கப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்தார். இதில் அந்த வாக்குச்சாவடிக்கு சம்பந்தமில்லாத வெளியாட்களும் இருந்தனர்.
வேட்பாளர் ஆனந்தன் உட்பட அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம், இரட்டை இலை சின்னம் பொறித்த புகைப்படங்களை தங்களது சட்டை பையில் வைத்திருந்தனர்.

ஆனந்தன் வாக்களித்த பின்னர் அந்த பெட்டியின் அருகில் நின்று கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க நினைவு படுத்தும் விதமாக தனது இரட்டை விரலை உயர்த்தி காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக வெளியில் வரும்போது என்னிடமும் என்னுடன் இருந்த முகவர்களுடன் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மீது தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அதிமுகவினர் என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. எனது உயிருக்கும் உடமைக்கும் அவர்களால் ஆபத்து வரும் கருதுகிறேன். எனவே, தாங்கள் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டு கொண்டுள்ளார்.கலெக்டரிடம் வழங்கிய புகார்  மனுவுடன் வாக்குச்சாவடியில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோ காட்சிகளின் பதிவு சி.டியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கினர்.

Tags : Communist Party of India ,Anandan ,AIADMK ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....