×

குன்னூரில் தீயணைப்பு துறையினர் தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

குன்னூர், ஏப்.22: குன்னூரில் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீ  விபத்து ஏற்படாதவாறு எவ்வாறு செயல்படுவது. வீடுகளில் சமையல் செய்து முடித்த பின் காஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை அனைத்து விடவேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தால் எவ்வாறு அனைக்க வேண்டும். பள்ளிகளில் வாரம் ஒரு முறை தீ விபத்து குறித்து மாணவர்களிடையே வகுப்புகள் எடுக்க வேண்டும். வணிக வளாகங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியேற்றும் பயிற்சி மற்றும் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் சாதனங்கள் மற்றும் மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள தீ பாதுகாப்பு கவசங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இது போன்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினர் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் தீயணைப்பு ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க உதகை 0423-2442999, கூடலூர் 04262- 261399, குன்னூர் 0423- 2230101, கோத்தகிரி 04266- 274101 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்கள் தெரிவிக்காலாம் என மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Firefighters ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...