×

சாய்தத்தா பிருந்தாவனத்தில் பிரதிஷ்டை தின விழா

நாமக்கல், ஏப்.22: நாமக்கல் அருகே வகுரம்பட்டி செல்லும் வழியில், இந்திரா நகரில் ஸ்ரீசாய் தத்தா பிருந்தாவன் பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபம் உள்ளது. இதில் பிரதிஷ்டை தினவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, காலையில் காகட ஆரத்தி, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சேலம் ஷீரடி சாய்மேவா டிரஸ்ட் குழுவினரின் பஜனையும், மாலையில் சிறப்பு தரிசனம் நடந்தது.  இன்று (22ம் தேதி) காலை 6 மணிக்கு காகட ஆரத்தி நிகழ்ச்சியும்,  8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பல்லாக்கு ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சாய் ஹர்ஷா பவுண்டேசன் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.




Tags : Dedication day ceremony ,
× RELATED கந்தசாமி கோயிலில் மண்டல பூஜை நிறைவு