×

ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள திருப்பாலத்துறை வாய்க்கால் தூர்ந்து வரும் அவலம்

பாபநாசம், ஏப். 22: கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை பாபநாசம் அருகே திருப்பாலத்துறை பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை தூர்வாராததால் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. ேமலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடக்கிறது.மேலும் ஆக்கிரமிப்பால் வாய்க்காலின் பரப்பு குறைந்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் வாய்க்கால் இருந்த அடையாளமே இல்லாமல் போய்விடும். வருங்காலத்தில் நல்ல மழை பெய்யும் பட்சத்தில் திருப்பாலத்துறை வாய்க்கால் தூர்வாராததால் மழைநீர் வடிய இடமின்றி திருப்பாலத்துறையில் உள்ள குடியிருப்புகள் நீரால் சூழும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைந்து தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜகிரியை சேர்ந்த அப்துல் ரசீது கூறுகையில், பாபநாசம் பகுதியை சேர்ந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பாபநாசம் பகுதியில் நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே வாய்க்கால்களை விரைந்து தூர்வார வேண்டும் என்றார்.

Tags : territories ,
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...