×

மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயிலில் ஐகோர்ட் நீதிபதி தரிசனம்

மணமேல்குடி, ஏப்.22: மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான குலச்சறைநாயனார் பிறந்து அவர் வழிபட்ட கோவிலாக இக்கோயில் உள்ளது. மேலும் தமிழகத்தில் அரிதாக காணப்படும் சரஸ்வதி கோயில் இந்த ஆலயத்தில் கல்விக்கு அதிபதியாக சரஸ்வதிக்கு தனிக் கோயில் கட்டுப்பட்டுள்ளது என்பது தனிசிறப்பாகும். இவ்வாலயத்தை பற்றி கேள்விபட்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் இவ்வாலயம் வந்து ஜெகதீஸ்வரரை வணங்கினார்.
இவருடன் புதுகை மாவட்ட நீதிபதி அறந்தாங்கி சார்பு நீதிபதி ஆகியோர் உடனிருந்தனர்.



Tags : Court of Judgment ,Manamekkudi Jegatheeswarar ,
× RELATED குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிரான...