×

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடு

கீழ்வேளூர், ஏப். 22:  கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில், சபதஸ்தான பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடு நடந்தது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் சித்திரை ஏகதின தீர்த்தோற்சவம் கடந்த 17ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 18ம் தேதி பஞ்சமூர்த்திகள் படியிறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓலை சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து கிழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு சபதஸ்தான பல்லக்கில்  கல்யாணசுந்தரர், அம்பாள், இந்திரன் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. இந்த சுவாமிகள் 7 ஊர்களுக்கு கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் இருந்து புறப்படும் சுவாமிகள் கீழ்வேளூர் மேலஅக்ரஹாரம் அனந்தீஸ்வரர் கோயில், அகரக்கடம்பனூர் ராமசாமி பொருமாள் கோயில், கடம்பனூர் கைலாசநாதர் கோயில், திருக்கண்ணங்குடி காளஹஸ்தீஸ்வரா கோயில்,  பட்டமங்கலம் காசிவிஸ்வநாதர்கோயில், அபிமுக்தீவரர்கோயில்,  வடக்காலத்தூர் சிதம்பரேஸ்வரர்-சிவகாமி கோயில், தேவூர் தேவபூரிஸ்வரர் கோயில், இலுப்பூர் சிதம்பரேஸ்வரர் கோயில், கூத்தூர் கைலாசநாதர் மற்றும் ஓம்பிரகாச விநாயகர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று அங்கு கோயில் சார்பில் பட்டு சாத்தி பூஜை செய்யப்படுகிறது. சுவாமி வீதி உலாவை முன்னிட்டு ஏழு ஊர்களிலும் பக்தர்கள் சுவாமிக்கு பட்டு சாத்தி அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.  35 ஆண்டுகளாக  7 ஊர் சுவாமி ஊர்வலம் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது  மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து வீதி உலாக காட்சி நடைபெறுகிறது. நாளை இரவு 7மணிக்கு 91 ஆண்டுகளுக்கு பின்  தெப்ப திருவிழா கோயில் திருக்குளத்தில் நடைபெறகிறது.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Swamigal ,Sapthastana Pallakal ,Kattavalur Athiyalalinga Swamy ,
× RELATED கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்