×

நாகை அடுத்த புலவனூரில் தேர்தல் அன்று நூறு நாள் வேலை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வலியுறுத்தல்

நாகை , ஏப்.22:நாகை அடுத்த புலவனூரில் தேர்தல் அன்று நூறு நாள் வேலை கொடுத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மோகனூர் ராமமூர்த்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் கிராமத்தில் மக்களவை பொது தேர்தல் அன்று  தேர்தல் ஆணையத்தால் 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த அன்று புலவனூர் கிராம மக்கள் வாக்களிக்க முடியாமல் ஜனநாயக கடமையை தடுக்கும் வகையில்  தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக  18ம் தேதி அன்று 100 நாள் வேலை வாய்ப்பு  கொடுக்கப்பட்டு அன்று யார் எல்லாம் வேலைக்கு வருகிறார்களே அவர்கள் தான் வாரம் முழுவதும் வேலை செய்யலாம் என்று கூறி கட்டாயப்படுத்தி 100 நாள் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர்.

வேறு வழியின்றி ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை செய்ய  கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பற்றி பணிதளப் பொறுப்பாளரிடம் கேட்டபோது ஊராட்சி செயலாளர் உத்தரவின் படிதான் 100 நாள் வேலை நடைபெறுகிறது என்றார். உடன் அந்த பகுதிக்கு சென்ற எங்கள் கூட்டணி கட்சியினர் அங்கு 100 நாள் வேலை நடந்ததை உறுதி செய்து வேலையை நிறுத்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (ஊராட்சி)  தொலை பேசியில் தெரிவிக்கப்பட்டது. வாக்கு பதிவு நாளான ஏப்பரல் 18ம் தேதி  தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு அளித்த  சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Secular Progressive Alliance Party ,election ,Nagapattinam ,
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்