×

செம்பனார்கோவில் பரசலூர் பகுதியில் குடிமகன்களின் பாராக மாறிவரும் காவிரிக்கரை அதிகாரிகள் மெத்தனம்

செம்பனார்கோவில், ஏப்.22: நாகை மாவட்டம், செம்பனார்கோவில், பரசலூர் பகுதி காவிரி படித்துறையை குடிமகன்கள் பாராக மாற்றி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.செம்பனார்கோவில் அடுத்து பரசலூரில்தான் மோசமான சுகாதாரம் கெட்டு போய் கொண்டிருக்கிறது.  பரசலூர் பகுதியில் காவிரி சென்று கொண்டிருக்கிறது.  குடகு மலையில் தோன்றி பூம்புகார் கடலில் கலக்கும் புண்ணியமான காவிரிதான் இது.  இக்காவிரி இப்போது பல்வேறு நோய்களின் பிறப்பிடமாக இருந்து வருகிறது.  காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் செம்பனார்கோவில், பரசலூர் பகுதி மக்களின் தினந்தோறும் வீசி எறியும் குப்பை கிடங்காக மாறி இருக்கிறது.  இக்காவிரி கரையோரம் எப்போது அரசு மதுபானக்கடை வந்ததோ அப்பொழுதுதான் இக்காவிரியில் தலையெழுத்து மாறி போனது.  இங்கு வரும் குடிமகன்கள் காவிரி படிதுறையை பார்களாக மாற்றி குடித்துவிட்டு பாட்டில்கள், வாட்டர் பாக்கெட் வரை வீசுவது இதில்தான்.  நாள் ஒன்றுக்கு சுமார் 1000 பேருக்கும் மேல் இந்த வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளும், மலைபோல் குவிந்து வருகிறது.

மேலும் பரசலூர், செம்பனார்கோவில் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதில் ஹோட்டல், முடிதிருத்தும் நிலையம், டீ கடை, இறைச்சி கடை, மண்டிகள் உள்பட உள்ளடக்கியவை.  ஹோட்டல் கழிவுகளான சாப்பாடு முதல் வீணாகும் சாம்பார் வரை கொட்டப்படுகிறது.  மேலும் முடிதிருத்தும் நிலையத்தில் உள்ள வெட்டப்படும் தலைமுடிகள் கொட்டப்படுகிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக 60க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிகளின் கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு, இறைச்சிகளின் கழிவு நாற்றங்கள் இப்பகுதி செல்லும் பொதுமக்களுக்கு வியாதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இப்பகுதியில் அரசு மதுபானகடை உள்ளதால், குடிமகன்கள் 24 மணி நேரமும் கிடப்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் இப்பகுதி மக்களான பரசலூர், நடுக்கரை ஊராட்சி மக்கள் அடிக்கடி உடல் உபாதை ஏற்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் வைரஸ் காய்ச்சல், தொற்று நோய் என்றே கூறுகின்றனர்.  இதற்கான காரணம் நாங்கள் இந்த சுகாதாரமற்ற சூழ்நிலை சுற்றி வசிப்பதுதான் என்று கூறுகிறார்கள். இந்த காவிரி செம்பனார்கோவில் வழியாகதான் செல்லும்.  இதேபோல் காவிரி பகுதியில் சகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கும்.  இந்த நிலையை அதிகாரிகள் ஏன் கண்டுகொள்வதில்லை?  பொதுமக்கள் நலன் கருதி பரசலூர், செம்பனார்கோவில் காவிரி பகுதியை சீர்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : cavalry ,citizens ,area ,Parasalur ,
× RELATED புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை...