×

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

விருதுநகர், ஏப். 22: ஈஸ்டர் பண்டிகையையொட்டி விருதுநகரில் கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புனிதவெள்ளி தினத்தன்று மாலை 3 மணியளவில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். 3ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை உயிர்தெழுந்த தினமாக உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில், பங்குந்தந்தை பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணைப்பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில் ஈஸடர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத் தந்தை திருச்சி காணிக்கைநாதன்,
விருதுநகர் எஸ்எப்எஸ் பள்ளி முதல்வர் அருள்பிரான்சிஸ், துணைப்பங்குத்தந்தை ஜெயராஜ், திருச்சி சந்தானம், புதுக்கோட்டை நாயகசீலன் ஆகியோர் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ் தலைமையிலும், ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பெனடிக்ட் பர்ணபாஸ் தலைமையிலும், ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.ஈஸ்டரையொட்டி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பாஸ்கா திருப்பலி வழிபாடு, திருஒளி வழிபாடு,  இறை வார்த்தை வழிபாடு, ஞானஸ்தான வழிபாடு மற்றும் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்தெழுந்ததை நினைவு கூறும் வகையில், சனிக்கிழமை இரவு 12 மணிக்கு திருப்பலி பீடத்தின் அருகில் இயேசு கிறிஸ்து கொல்கதா மலையில் உயிர்த்தெழுந்து காட்சி கொடுப்பதை போல் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் இசைக்கருவிகள் முழங்க, பட்டாசு வெடித்து மெழுகுவர்த்தி ஏந்தி உற்சாகமாக வரவேற்றனர். மாலையில் உயிர்தெழுந்த ஆண்டவரின் தேர்பவனி, நற்கருனை ஆராதனை நடைபெற்றது.

Tags : churches ,feast ,Easter ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து