×

ஆலங்குளத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் ‘காலி’ பஸ்நிலையம் செல்ல அஞ்சும் பயணிகள்

சிவகாசி, ஏப். 22: வெம்பக்கோட்டை அருகே, ஆலங்குளம் முக்குரோட்டில் ஹைமாஸ் விளக்குகள் பழுதாகி இருப்பதால், இரவு நேரங்களில் பஸ்நிலையம் செல்வதற்கு பயணிகள் அஞ்சும் அவலம் உள்ளது. இதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகாவில் ஆலங்குளம் கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆலங்குளம் உள்ளது. இதனால், கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கு ஆலங்குளம் வந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். இங்கிருந்து சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆலங்குளம் முக்குரோட்டில் உள்ள ஹைமாஸ்விளக்கு பழுதாகி காட்சி பொருளாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டாக உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் மக்கள் பஸ்நிலையம் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம், ஹைமாஸ் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Allegheny ,passenger ,Alangulam ,Galle' Bus Stand ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...