×

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்

நாகர்கோவில், ஏப். 22: நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. நாகர்கோவில், ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரிக்கு சுகாதார ஆய்வாளர் படிப்புக்கான அனுமதி தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து 2017-2018, 2018-2019 கல்வியாண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் கல்லூரி துணைத்தலைவர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் லியாகத் அலி மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் செய்தார். ரோஜாவனம் கல்லூரி குறித்து அதன் துணைத்தலைவர் அருள்ஜோதி கூறியதாவது: மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் அல்லது அறிவியல் பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும் சுகாதார ஆய்வாளர் படிப்பில் சேர தகுதியுடையவர்கள். சிறந்த நிர்வாகம், அனுபவமிக்க ஆசிரியர்கள், ஆய்வகங்கள், தங்கும் விடுதி, கேன்டீன் மற்றும் பஸ் வசதிகளுடன் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நேரடியாக அழைத்து சென்று பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் திறமை வளர்க்க பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ரெட்கிராஸ், ரோவர் ஸ்கவுட், இயற்கை நண்பர்கள் அமைப்பு, அதங்கோட்டாசன் தமிழ் சங்கம், ஆங்கில புலமை சங்கம், முதலுதவி சங்கம், பேரிடர் மேலாண்மை குழு, சுகாதார குழு உள்ளிட்ட குழுக்களை ஏற்படுத்தி மாணவர்களின் திறமையை வளர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல கல்லூரி பேருந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுகிறது. தங்கும் விடுதி மாணவர்கள் நலனுக்காக அனைத்து வசதிகளுடன் செயல்படுகிறது. 2017-18 அரசு தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வியாண்டு முதல் இரண்டு வருட கிராம சுகாதார செவிலியர் படிப்பு (ஏஎன்எம்) துவங்கப்பட இருக்கிறது. இதில் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற பெண்கள் சேர்ந்து படித்து பெயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.விண்ணப்ப விநியோக நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டாக்டர் அருணாச்சலம், அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதி பெருமாள், மரியஜாண், கார்த்திக், லிட்வின் லூசியா, சாம் ஜெபா, நன்னடத்தை அலுவலர் டால்பின் ராஜா, அலுவலக செயலர் சுஜின், விடுதி காப்பாளர் டேனியல், நூலகர் கோலப்பன் உட்பட அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...