×

ஆண்டிபட்டி அருகே அதிமுக, அமமுக கோஷ்டி மோதல் 15 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி,ஏப்.22:  தேனி மக்களவைத் தொகுதி ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.18ம் தேதி நடைபெற்றது. இதில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதில் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. மூன்று நாட்களுக்கு முன் ராமலிங்கபுரம் மந்தை பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியது.  இதனையடுத்து அமமுக கிளைச்செயலாளர் பீமராஜ் கண்டமனூர் காவல் நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த முருகதாஸ் (40), லதா (38), அழகர்சாமி (50), முத்துமணி (47), மகேஸ்வரி (37), அழகுராஜா (38) ஆகியோர் மீது தங்களைத் தாக்கிய காயப்படுத்தியதாக புகார் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிமுக கிளைச் செயலாளர் முத்துமணி, அமமுகவை சேர்ந்த செல்வகுமார் (38 ), முத்துக்குமார் (30), பீமராஜ் (60 ), ராமுத்தாய் (55), பாண்டியம்மாள் (40), சரோஜா (35), கொப்பன்(60 ), ராஜா (30) ஜீவா (28) ஆகியோர் தங்களை தாக்கியதாக புகார் அளித்தார். இரண்டு புகார்களையும் பெற்றுக்கொண்ட கண்டமனூர் சார்பு ஆய்வாளர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து 15 நபர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,Adipatti ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...