×

திருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயம்

மதுரை, ஏப். 22:  மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலையாளத்தான்பட்டியைச் சேர்ந்த இளையராஜா குடும்பத்தினர், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்க, கடந்த 19ம் ேததி  மதுரை வந்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய பின் வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர். அப்போது, இவர்களுடன் வந்த இளையராஜாவின் மகள் ஆர்த்தி(16) திடீரென காணாமல் போய்விட்டார். உறவினர்கள் திருவிழா கூட்டத்தில் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும், ஆர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பாட்டி நாகலெட்சுமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : magician ,festival ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!